முன்பு எனக்குள் நீ இருந்த இடத்தில்
வெற்றிடம் உண்டாகி விட்டது
அது பார்க்கும் பொருளை எல்லாம்
தன்னுள் இழுத்துக்கொண்டும் நிறையவில்லை
எனக்கு சந்தேகமாயிருக்கிறது
எனக்குள் இருந்தது
மனதில் நீயா
இல்லை நீயே மனமா???????
கேட்டுக்கொள்ள செவியிருக்க
பேசிக்கொள்ள நாமிருக்க
இவையெல்லாம் பயனற்று இருக்க
என் பேனா மட்டும் கதறிக்கொண்டு...........
நான் பார்த்த பொழுது
நீ பார்க்கவில்லை
நீ பார்த்த பொழுது
நான் பார்க்கவில்லை
நம் இருவிழி சந்தித்தால் பிரளயம் நிச்சயம் என்பது பரமனுக்கும் தெரிந்திருக்குமோ ??????????????
Followers
Archives
-
▼
2010
(1)
- ▼ 04/18 - 04/25 (1)
-
►
2009
(13)
- ► 04/26 - 05/03 (2)
- ► 04/19 - 04/26 (4)
- ► 04/12 - 04/19 (7)